Breaking News

ஜெயலலிதாவின் ஆண்மா அரசியல், தினகரனின் வெற்றி ஓர் அரசியல் மாயை

ஜெயலலிதாவின் ஆண்மா அரசியல், தினகரனின் வெற்றி ஓர் அரசியல் மாயை

டி.டி.தினகரன் வெற்றிபெற்றார் என்பது செய்தி. ஆனால் அ.தி.மு.கவின் உள்ளக விடயம் அறிந்தவர்கள், தமிழக அரசியலை நன்கு தெரிந்தவர்கள் தினகரனின் வெற்றி, ஓர் அரசியல் மாயை (Political illusion) என விர்சகர்கள் கூறுகின்றனர்.

மக்கள் ஆதரவு இருந்தால் எவரும் வெற்றிபெறலாம் என்பதற்கு தினகரனின் வெற்றி நல்ல உதாரணம். ஆனால் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மக்கள் ஆதரவு என்பது அறிவூர்வமான அடிப்படையில் அமைவதில்லை என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அந்த அடிப்படையில் தினகரனின் வெற்றி என்பது அறிவுபூர்வமாக அமைந்ததாக கூற முடியாது என்றும், உணர்ச்சியடிப்படையில் கூட அந்த வெற்றியை நோக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ள விமர்சகர்கள், ஆர்.கே நகர் உள்ளிட்ட தமிழக மக்களின் பரிதாப நிலைமை குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.

ஜெயலிதாவின் மறைவக்குப் பின்னர் அ.தி.மு.காவிற்குள் ஏற்பட்ட பிளவு, தினகரனின் வெற்றிக்கு வாய்ப்பாக அமைந்ததாக சிலர் கூறுகின்றனர். ஆனால் தமிழக மக்களைப் பொறுத்தவரை பிதான கட்சி ஒன்றுக்குள் பிளவு அல்லது முரண்பாடு ஏற்பட்டால் தேர்தல் வரும்போது, மற்றைய பிரதான கட்சிக்கே வாக்கிப்பார்கள் என்பது வரலாறு.

ஆகவே ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு என்றுமே இல்லாவாறு எதிர்பாராத முடிவைக் கொடுத்துள்ளது. அ.தி.முகாவில் இருந்து முரண்பட்டு, பிளவுபட்டு பின்னர், வெறுமனே சுயேற்சையாகப் போட்டியிட்ட தினகரனை மக்கள் வெற்றிபெறச் செய்துள்ளார்கள் என்றால், அவரின் அரசியல் கொள்கையில் ஏற்பட்ட பிடிப்பு காரணமா என்பது இங்கே கேள்விதான்.

அப்படியானால், மக்கள் தினகரனின் கொள்கைகளை வாசித்து அறிந்து அறிவுசார்ந்து வாக்களித்தார்களா என்பது மற்றுமொரு கேள்வி. அதேவேளை மக்கள் முதலமைச்சர் என போற்றப்படும் ஜெயலலிதாவினால், 2011ஆம் ஆண்டு தூக்கி எறியப்பட்டு கட்சியில் இருந்து விலக்கப்பட்ட தினகரன், எப்படி வெற்றிபெற்றார்? அதுவும் ஜெயலலிதாவின் தொகுதியில் என்று இன்னுமொரு கேள்வி எழுகின்றது.

ஆகவே தினகரன் வெற்றி குறித்து கேள்விமேல் கேள்வி எழும் நிலையில் தமிழக அரசியலின் எதிர்காலம் தொடர்பான சந்தேகங்கள், குழப்பங்கள் மேலும் தோன்றியுள்ளதாக விமர்சகர்கள் கூறுவதாக ஐ.பி.தமிழ் செய்தியாளர் கூறினார்.

ஆர்.கே நகர் தேர்தல் முடிவு வெளிவரும் வரை அ.தி.மு.கா வேட்பாளரா தி.மு.கா வேட்பாளரா என்றுதான் எதிர்ப்பார்க்கப்பட்டது. இவ்வாறான எதிர்ப்பார்ப்புத்தான் முன்னர் நடைபெற்ற தேர்தல்களிலும் இருந்தது. இரு கட்சிகளில் ஒரு கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவார்.

அந்த வெற்றியின் முடிவில் பணம், சலுகைகள் நிவாரணங்கள்தான் செல்வாக்கும் செலுத்தியிருக்கும். ஆனால், ஆர்.கே.நகர் இடைக்கால தேர்தல் முடிவுகள், தமிழக அரசியலின் சரித்திரத்தை மாற்றியமைத்துள்ளன. ஆகவே அந்த இரு கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வழமையாகக் கையாளும் பணம், சலுகைகள் நிவாரணங்கள் என்ற உத்தியைத் தாண்டி தினகரன் கையான்ட உத்திதான் என்ன?

கடந்த 30 ஆண்டுகால தமிழக தேர்தல் வரலாற்றில், அதுவும் மிகவும் மக்கள் செல்வாக்குள்ள ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட முன்றாம் நபர்கள் எவரும் 5 ஆயிரம் வாக்குகளைக் கூட பெற்றது கிடையாது.
ஆகவே தினகரனை வெற்றிபெறச் செய்ததன் மூலம், இறந்து போன ஜெயலலிதாவின் ஆண்மாவுக்கும், ஜெயலலிதாவின் ஆண்மாவை வைத்து அரசியல் செய்யும் அ.தி.மு.காவுக்கும் மக்கள் சொல்லும் செய்தி என்ன?

ஜெயலலிதாவினால் தினகரன் அ.தி.மு.காவில் இருந்து அன்று தூக்கி எறியப்பட்டமை தவறு என்று மக்கள் கூறுகின்றார்களா? அப்படியானால் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதாவை மக்கள் ஆர்.கே.நகர் தேர்தலில் தோல்வியடைச் செய்திருக்கலாமே?

2011ஆம் ஆண்டு சசிகலாவுடன், மன்னார் குடி குடும்பம், ஜெயலிதாவினால் துாக்கி எறியப்பட்டபோது, தினகரன் மீதும் ஜெயலிதாவின் ஆவசம் பாய்ந்தது. பின்னர் சசிகலாவை மன்னித்து மீண்டும் தோழியாக அழைத்தார். ஆனால் தினகரன் மீண்டும் கட்சிக்குள் அழைக்கக்படவே இல்லை.

ஆனால் 2016 டிசம்பர் மாதம் ஜெயலலிதா இறந்த பின்னர், அ.தி.மு.க.பொதுச் செயலாளர் பதவியை பலாத்காரமாக பெற்றுக்கொண்ட சசிகலா தினகரனை கட்சிக்குள் மீண்டும் அழைத்தார். ஆனால் நாட்களுக்குள் சொத்துக்குவிப்பு வழங்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனால் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுகள் முரண்பாடுகளினால், தினகரன் அ.தி.மு.காவில் இருந்து வெளியேற்றப்பட்டார். தினகரன், ஜெயலிதாவினால் ஒதுக்கி வைக்கப்பட்டவர், என்றும் அ.தி.மு.கவின் பிரச்சாரம் செய்தனர். ஆனாலும் ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் 80 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

எனவே இந்த தேர்தல் முடிவு, தமிழக மக்களின் அரசியல் பலவீனத்தை வெளிகாட்டியுள்ளது என்று கூறலாமா என்பது விவாதத்திற்குரியது. அதேவேளை தமிழக முதலமைச்சருக்கான சட்ட சபைத் தேர்தலிலும் இந்த தேர்தல் தாக்கத்தை செலுத்தலாம்,

ஆகவே தங்களை ஜெயலலிதாவின் ஆண்மா இயக்குவதாக தமிழக அரசியலில் கதைவிட்ட பண்ணீர்ச் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்  தேர்தல் முடிவு பற்றி, மக்களுக்கு சொல்லப் போகும் செய்ததான் என்ன?

ஜெயலலிதாவின் ஆண்மா என்னைத்தான் இயக்குகின்றது என தினகரன் கூறுவாரானால், 2011ஆம் ஆண்டு தினகரனை தூக்கி எறிந்த ஜெயலிதாவின் முடிவுக்கு என்ன பதில்? எதுவானாவும் இறந்துபோன ஆண்மா ஒன்றை வைத்து,உலகில் முதன் முதலில் அரசியல் செய்தது தமிழகம்தான்.

ஆண்மா, பிசாசு, அது இது என்று முட்டாள்தனமான, அதுவும் பிற்போக்கான கருத்துக்களை நம்பும் தமிழக அரசியல் சூழலில், தினகரன் வெற்றியடைந்தமைக்கான காரணத்தை அறிந்துகொள்ள வேண்டிய தேவை இல்லையென, கூறிய விமர்சகர்கள் இது ஒரு அரசியல் மாயை என்றும் வர்ணித்துள்ளதாக ஐ.பி.சி.தமிழச் செய்தியாளர் குறிப்பிட்டார்.

 

Recent Posts

Popular Posts

Political News

More Posts

Categories

Latest Reviews


Loading, Please Wait for a while...